வைரல் ஆகும் "யானை" பட ட்ரெய்லர்

#TamilCinema
Keerthi
3 years ago
வைரல் ஆகும் "யானை" பட ட்ரெய்லர்

நடிகர் அருண் விஜய்யின் ‘யானை’ டீசர் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் காரைக்குடியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகியிருக்கிறது. ’பாம்பன் பாலம், ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், பெரும் துரோகம் எனத் தொடங்கும் டீசர் வழக்கமான ஹரி படம்போல் ஆக்‌ஷன் காட்சிகளுடன் ‘இவனுக்கு தூக்கி சுமக்கவும் தெரியும்... தூக்கிப்போட்டு மிதிக்கவும் தெரியும்’ என்று நிறைவடைகிறது. ஆனால், டீசரில் ஈர்க்கும் விதமான காட்சிகளோ... வசனங்களோ இல்லை என்று கருத்திட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!